தொடக்கம் | ||
குடிப்பிறப்பு
|
||
141. | உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும், குடிப் பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்;- இடுக்கண் தலைவந்தக்கண்ணும், அரிமா கொடிப் புல் கறிக்குமோ மற்று? |
உரை |
142. | சான்றாண்மை, சாயல், ஒழுக்கம், இவை மூன்றும் வான் தோய் குடிப் பிறந்தார்க்கு அல்லது,-வான் தோயும் மை தவழ் வெற்ப!-படாஅ, பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும், பிறர்க்கு. |
உரை |
143. | இருக்கை எழலும், எதிர் செலவும், ஏனை விடுப்ப ஒழிதலோடு, இன்ன, குடிப் பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார்; கயவரோடு ஒன்றா உணரற்பாற்று அன்று. |
உரை |
144. | நல்லவை செய்யின் இயல்பு ஆகும்; தீயவை பல்லவர் தூற்றும் பழி ஆகும்; எல்லாம் உணரும் குடிப் பிறப்பின் ஊதியம் என்னோ புணரும் ஒருவர்க்கு எனின்? |
உரை |
145. | கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்; சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம்; எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம்; மரத்தார்; இம் மாணாக் குடிப் பிறந்தார். |
உரை |
146. | இன நன்மை, இன்சொல், ஒன்று ஈதல், மற்று ஏனை மன நன்மை, என்று இவை எல்லாம்,-கன மணி முத்தோடு இமைக்கும் முழங்கு உவரித் தண் சேர்ப்ப!- இற் பிறந்தார்கண்ணே உள. |
உரை |
147. | செய்கை அழிந்து, சிதல் மண்டிற்றுஆயினும், பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும்;- எவ்வம் உழந்தக்கடைத்தும், குடிப் பிறந்தார் செய்வர், செயற்பாலவை. |
உரை |
148. | ஒரு புடை பாம்பு கொளினும், ஒரு புடை அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள்போல்,- செல்லாமை செல்வன் நேர் நிற்பினும், ஒப்புரவிற்கு ஒல்கார்-குடிப் பிறந்தார். |
உரை |
149. | செல்லா இடத்தும் குடிப் பிறந்தார் செய்வன, செல் இடத்தும் செய்யார், சிறியவர்;-புல்வாய் பருமம் பொறுப்பினும், பாய் பரிமாபோல் பொரு முரண் ஆற்றுதல் இன்று. |
உரை |
150. | எற்று ஒன்றும் இல்லா இடத்தும், குடிப் பிறந்தார் அற்றுத் தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர்;- அற்றக் கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால், தெற்றெனத் தெள் நீர் படும். |
உரை |