பெரியாரைப் பிழையாமை
 
161. 'பொறுப்பர்' என்று எண்ணி, புரை தீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; வெறுத்தபின்,-
ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட!-
பேர்க்குதல் யார்க்கும் அரிது.
உரை
   
162. பொன்னே கொடுத்தும், புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும், அன்னோ!
பயன் இல் பொழுதாக் கழிப்பரே-நல்ல
நயம் இல் அறிவினவர்.
உரை
   
163. அவமதிப்பும், ஆன்ற மதிப்பும், இரண்டும்,
மிகை மக்களால் மதிக்கற்பால; நயம் உணரா,
கை அறியா, மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும்,
வையார், வடித்த நூலார்.
உரை
   
164. விரி நிற நாகம் விடர் உளதேனும்,
உருமின் கடுஞ் சினம் சேண் நின்றும், உட்கும்;-
அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்,
பெருமை உடையார் செறின்.
உரை
   
165. 'எம்மை அறிந்திலிர்; எம் போல்வார் இல்' என்று
தம்மைத் தாம் கொள்வது கோள் அன்று; தம்மை
அரியரா நோக்கி, அறன் அறியும் சான்றோர்,
பெரியராக் கொள்வது கோள்.
உரை
   
166. நளி கடல் தண் சேர்ப்ப! நாள் நிழல் போல
விளியும், சிறியவர் கேண்மை; விளிவு இன்றி,
அல்கு நிழல்போல், அகன்று அகன்று ஓடுமே,
தொல் புகழாளர் தொடர்பு.
உரை
   
167. மன்னர் திருவும், மகளிர் எழில் நலமும்,
துன்னியார் துய்ப்பர்; தகல் வேண்டா;-துன்னிக்
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை, தம்கண் சென்றார்க்கு ஒருங்கு.
உரை
   
168. தெரியத் தெரியும் தெரிவு இலார்க்கண்ணும்
பெரிய, பெரும் படர் நோய் செய்யும்;-பெரிய
உலவா இருங் கழிச் சேர்ப்ப!-யார் மாட்டும்
கலவாமை கோடி உறும்.
உரை
   
169. கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், ஒல்வ
கொடாஅது ஒழிந்த பகலும்,-உரைப்பின்,
படாஅ ஆம், பண்புடையார்கண்.
உரை
   
170. பெரியார் பெருமை சிறு தகைமை; ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம்; தெரியுங்கால்,
செல்வம் உடையாரும் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைபஎனின்.
உரை