தொடக்கம் | ||
நல்லினம் சேர்தல்
|
||
171. | அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி, நெறியல்ல செய்து ஒழுகியவ்வும், நெறி அறிந்த நற் சார்வு சார, கெடுமே-வெயில் முறுகப் புற் பனிப் பற்று விட்டாங்கு. |
உரை |
172. | அறிமின், அற நெறி; அஞ்சுமின், கூற்றம்; பொறுமின், பிறர் கடுஞ் சொல்; போற்றுமின், வஞ்சம்; வெறுமின், வினை தீயார் கேண்மை; எஞ் ஞான்றும் பெறுமின், பெரியார் வாய்ச் சொல். |
உரை |
173. | அடைந்தார்ப் பிரிவும், அரும் பிணியும், கேடும், உடங்கு, உடம்பு கொண்டார்க்கு உறலால், தொடங்கி, 'பிறப்பு இன்னாது' என்று உணரும் பேர் அறிவினாரை உறப் புணர்க, அம்மா, என் நெஞ்சு! |
உரை |
174. | இறப்ப நினையுங்கால், இன்னாது எனினும், பிறப்பினை யாரும் முனியார்-பிறப்பினுள் பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்கெளாடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றி நட்கப் பெறின். |
உரை |
175. | ஊர் அங்கண நீர் உரவு நீர்ச் சேர்ந்தக்கால், பேரும் பிறிது ஆகி, தீர்த்தம் ஆம்;-ஓரும் குல மாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர், நல மாட்சி நல்லாரைச் சார்ந்து. |
உரை |
176. | ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால், ஓங்கிய அம் கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்;- குன்றிய சீர்மையர் ஆயினும், சீர் பெறுவர், குன்று அன்னார் கேண்மை கொளின். |
உரை |
177. | பாலோடு அளாய நீர் பால் ஆகும் அல்லது, நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம்;-தேரின், சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. |
உரை |
178. | கொல்லை இரும் புனத்துக் குற்றி அடைந்த புல் ஒல்காவே ஆகும், உழவர் உழுபடைக்கு;- மெல்லியரேஆயினும், நற் சார்வு சார்ந்தார்மேல், செல்லாவாம், செற்றார் சினம். |
உரை |
179. | நில நலத்தால் நந்திய நெல்லேபோல், தம்தம் குல நலத்தால் ஆகுவர், சான்றோர்; கல நலத்தைத் தீ வளி சென்று சிதைத்தாங்கு, சான்றாண்மை தீஇனம் சேரக் கெடும். |
உரை |
180. | மனத்தால் மறு இலரேனும், தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர்;-புனத்து வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறி புனம் தீப்பட்டக்கால். |
உரை |