பெருமை
 
181. 'ஈதல் இசையாது; இளமை சேண் நீங்குதலால்,
காதலவரும் கருத்து அல்லர்; காதலித்து,
“ஆதும் நாம்” என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்!'
உரை
   
182. 'இச் சார்வின் ஏமாந்தேம்; ஈங்கு அமைந்தேம்' என்று எண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவர், பேதையார்; 'அச் சார்வு
நின்றன போன்று நிலையா' என உணர்ந்தார்,
என்றும் பரிவது இலர்.
உரை
   
183. மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து,
சிறுமைப் படாதே, நீர் வாழ்மின், அறிஞராய்;-
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம்; காரணம்
இன்றிப் பலவும் உள.
உரை
   
184. 'உறைப்பு அருங் காலத்தும், ஊற்று நீர்க் கேணி
இறைத்து உணினும், ஊர் ஆற்றும்' என்பர்; கொடைக்கடனும்,
சாஅயக்கண்ணும், பெரியார்போல் மற்றையார்
ஆஅயக்கண்ணும், அரிது.
உரை
   
185. உறு புனல் தந்து, உலகு ஊட்டி, அறும் இடத்தும்
கல்லுற்றுழி ஊறும் ஆறேபோல், செல்வம்
பலர்க்கு ஆற்றி, கெட்டு உலந்தக்கண்ணும், சிலர்க்கு ஆற்றிச்
செய்வர், செயற்பாலவை.
உரை
   
186. பெரு வரை நாட! பெரியார்கண் தீமை
கரு நரைமேல் சூடேபோல் தோன்றும்; கரு நரையைக்
கொன்றன்ன இன்னா செயினும், சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
உரை
   
187. இசைந்த சிறுமை இயல்பு இலாதார்கண்
பசைந்த துணையும், பரிவு ஆம்; அசைந்த
நகையேயும் வேண்டாத நல் அறிவினார்கண்
பகையேயும் பாடு பெறும்.
உரை
   
188. மெல்லிய நல்லாருள் மென்மை, அது இறந்து
ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை, எல்லாம்
சலவருள் சாலச் சலமே, நலவருள்
நன்மை,-வரம்பாய் விடல்!
உரை
   
189. கடுக்கி, ஒருவன் கடுங் குறளை பேசி,
மயக்கிவிடினும், மனப் பிரிப்பு ஒன்று இன்றி,
துளக்கம் இலாதவர், தூய மனத்தார்,
விளக்கினுள் ஒண் சுடரே போன்று.
உரை
   
190. முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து,
பின் துற்றுத் துற்றுவர், சான்றவர்; அத் துற்று
முக் குற்றம் நீக்கி, முடியும் அளவு எல்லாம்
துக்கத்துள் நீக்கிவிடும்.
உரை