தாளாண்மை
 
191. கோள் ஆற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங் கூழ்போல்,
கேள் ஈவது உண்டு, கிளைகேளா துஞ்சுப;
வாள் ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ, தவறு?
உரை
   
192. ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம்,
காழ் கொண்டகண்ணே, களிறு அணைக்கும் கந்து ஆகும்;-
வாழ்தலும் அன்ன தகைத்தே, ஒருவன்தான்
தாழ்வு இன்றித் தன்னைச் செயின்.
உரை
   
193. உறு புலி ஊன் இரை இன்றி, ஒருநாள்
சிறு தேரை பற்றியும் தின்னும்;-அறிவினால்
கால்-தொழில் என்று கருதற்க! கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
உரை
   
194. இசையாது எனினும், இயற்றி, ஓர் ஆற்றால்
அசையாது, நிற்பதாம் ஆண்மை; இசையுங்கால்,-
கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப!-
பெண்டிரும் வாழாரோ மற்று?
உரை
   
195. நல்ல குலம் என்றும், தீய குலம் என்றும்,
சொல் அளவு அல்லால் பொருள் இல்லை; தொல் சிறப்பின்
ஒண் பொருள் ஒன்றோ? தவம், கல்வி, ஆள்வினை,
என்று இவற்றான் ஆகும், குலம்.
உரை
   
196. ஆற்றும் துணையும், அறிவினை உள் அடக்கி,
ஊற்றம் உரையார் உணர்வு உடையார்; ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது, உலகு.
உரை
   
197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை,
மதலை ஆய், மற்று அதன் வீழ் ஊன்றியாங்கு,
குதலைமை தந்தைகண் தோன்றின், தான் பெற்ற
புதல்வன் மறைப்ப, கெடும்.
உரை
   
198. ஈனமாய், இல் இருந்து, இன்றி, விளியினும்,
மானம் தலைவருவ செய்பவோ-யானை
வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள்
அரிமா மதுகையவர்?
உரை
   
199. தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி
தேம் கமழ் நாற்றம் இழந்தாஅங்கு, ஓங்கும்
உயர் குடியுள் பிறப்பின் என்னாம்-பெயர் பொறிக்கும்
பேர் ஆண்மை இல்லாக்கடை?
உரை
   
200. பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்
கருனைச் சோறு ஆர்வர் கயவர்; கருனையைப்
பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்து ஆய்விடும்.
உரை