சுற்றந் தழால்
 
201. வயாவும், வருத்தமும், ஈன்றக்கால் நோவும்,
கவாஅன் மகற் கண்டு தாய் மறந்தாஅங்கு,
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத் தன்
கேளிரைக் காண, கெடும்.
உரை
   
202. அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழல் மரம்போல் நேர் ஒப்பத் தாங்கி, பழு மரம்போல்
பல்லார் பயன் துய்ப்ப, தான் வருந்தி வாழ்வதே-
நல் ஆண்மகற்குக் கடன்.
உரை
   
203. அடுக்கல் மலை நாட! தற் சேர்ந்தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர்;-அடுத்து அடுத்து
வன் காய் பலபல காய்ப்பினும், இல்லையே,
தன் காய் பொறுக்கலாக் கொம்பு?
உரை
   
204. உலகு அறியத் தீரக் கலப்பினும், நில்லா,
சில பகல் ஆம், சிற்றினத்தார் கேண்மை; நிலை திரியா-
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்றனைத்தால்,
ஒற்கம் இலாளர் தொடர்பு.
உரை
   
205. ‘இன்னர்; இனையர்; எமர்; பிறர்’ என்னும் சொல்
என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி,
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே,-யார்மாட்டும்
தலைமக்கள் ஆகற்பாலார்.
உரை
   
206. பொற் கலத்துப் பெய்த புலி உகிர் வான் புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார் கைத்து உண்டலின்,
உப்பு இலிப் புற்கை, உயிர்போல் கிளைஞர் மாட்டு
எக் கலத்தானும் இனிது.
உரை
   
207. நாள்வாய்ப் பெறினும், தம் நள்ளாதார் இல்லத்து,
வேளாண்மை வெங் கருனை வேம்பு ஆகும்; கேளாய்;
அபரானப் போழ்தின் அடகு இடுவரேனும்,
தமர் ஆயார்மாட்டே இனிது.
உரை
   
208. முட்டிகை போல முனியாது, வைகலும்,
கொட்டி உண்பாரும், குறடுபோல் கைவிடுவர்,
சுட்டுக்கோல் போல, எரியும் புகுவரே,
நட்டார் எனப்படுவார்.
உரை
   
209. நறு மலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வது ஒன்று உண்டோ-இறும் அளவும்,
இன்புறுவ இன்புற்று எழீஇ, அவரொடு
துன்புறுவ துன்புறாக்கால்?
உரை
   
210. விருப்பு இலார் இல்லத்து வேறு இருந்து உண்ணும்
வெருக்குக் கண் வெங்கருனை வேம்பு ஆம்; விருப்புடைத்
தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர்த் தண் புற்கை
என்போடு இயைந்த அமிழ்து.
உரை