தொடக்கம் | ||
நட்பாராய்தல்
|
||
211. | கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை, எஞ் ஞான்றும், குருத்தின் கரும்பு தின்றற்றே; குருத்திற்கு எதிர் செலத் தின்றன்ன தகைத்துஅரோ, என்றும் மதுரம் இலாளர் தொடர்பு. |
உரை |
212. | இற் பிறப்பு எண்ணி, இடை திரியார் என்பது ஓர் நல் புடை கொண்டமை அல்லது,-பொன் கேழ் புனல் ஒழுகப் புள் இரியும் பூங் குன்ற நாட!- மனம் அறியப்பட்டது ஒன்று அன்று. |
உரை |
213. | யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை அறிந்து அறிந்தும், பாகனையே கொல்லும்; எறிந்த வேல் மெய்யதா, வால் குழைக்கும், நாய். |
உரை |
214. | பல நாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில் சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பல நாளும் நீத்தார் என, கைவிடல் உண்டோ-தம் நெஞ்சத்து யாத்தாரோடு யாத்த தொடர்பு? |
உரை |
215. | கோட்டுப்பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது, வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி; தோட்ட கயப்பூப்போல் முன் மலர்ந்து, பின் கூம்புவாரை நயப்பாரும் நட்பாரும் இல். |
உரை |
216. | கடையாயார் நட்பில் கமுகு அனையர்; ஏனை இடையாயார் தெங்கின் அனையர்; தலையாயார் எண்ண அரும் பெண்ணை போன்று, இட்ட ஞான்று இட்டதே, தொன்மை உடையார் தொடர்பு. |
உரை |
217. | கழுநீருள் கார் அடகேனும், ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்து ஆம்; விழுமிய குய்த் துவை ஆர் வெண் சோறே ஆயினும், மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங்காய். |
உரை |
218. | நாய்க் கால் சிறு விரல்போல் நன்கு அணியர் ஆயினும், ஈக் கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய் விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு. |
உரை |
219. | தெளிவு இலார் நட்பின் பகை நன்று; சாதல் விளியா அரு நோயின் நன்றால்; அளிய இகழ்தலின் கோறல் இனிதே; மற்று இல்ல புகழ்தலின் வைதலே நன்று. |
உரை |
220. | மரீஇ, பலரொடு பல் நாள் முயங்கி, பொரீஇ, பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்; பரீஇ, உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா, மரீஇ,இப், பின்னைப் பிரிவு. |
உரை |