தொடக்கம் | ||
நட்பிற் பிழைபொறுத்தல்
|
||
221. | நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை, அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;- நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு; புல் இதழ் பூவிற்கும் உண்டு. |
உரை |
222. | செறுத்தோறு உடைப்பினும், செம் புனலோடு ஊடார், மறுத்தும் சிறைசெய்வர், நீர் நசைஇ வாழ்நர்;- வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே, தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு. |
உரை |
223. | இறப்பவே தீய செயினும், தன் நட்டார் பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ?-நிறக் கோங்கு உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட!- ஒருவர் பொறை இருவர் நட்பு. |
உரை |
224. | மடி திரை தந்திட்ட வான் கதிர் முத்தம் கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப! விடுதற்கு அரியார் இயல்பு இலரேல், நெஞ்சம் சுடுதற்கு மூட்டிய தீ. |
உரை |
225. | இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம் இல்லத்தில் ஆக்குதலால். |
உரை |
226. | இன்னா செயினும், விடுதற்கு அரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ? துன்னு அருஞ்சீர் விண் குத்தும் நீள் வரை வெற்ப!- களைபவோ, கண் குத்திற்று என்று தம் கை? |
உரை |
227. | இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! இன்னா செயினும், கலந்து பழி காணார், சான்றோர்; கலந்தபின், தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்- தாமும், அவரின் கடை. |
உரை |
228. | ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும், நோதக்கது என் உண்டாம், நோக்குங்கால்? காதல் கழுமியார் செய்த,-கறங்கு அருவி நாட!- விழுமிதாம், நெஞ்சத்துள் நின்று. |
உரை |
229. | தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத் தமர் அன்மை தாம் அறிந்தார் ஆயின், அவரைத் தமரினும் நன்கு மதித்து, தமர் அன்மை தம்முள் அடக்கிக்கொளல்! |
உரை |
230. | ‘குற்றமும், ஏனைக் குணமும், ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல், நட்டான் மறை காவா விட்டவன் செல்வுழிச் செல்க, அறை கடல் சூழ் வையம் நக!’ |
உரை |