தொடக்கம் | ||
அறிவுடைமை
|
||
241. | பகைவர் பணிவு இடம் நோக்கி, தகவு உடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார்;-காணாய்; இளம் பிறை ஆயக்கால் திங்களைச் சேராது, அணங்கு அருந் துப்பின் அரா. |
உரை |
242. | நளி கடல் தண் சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு அணிகலம் ஆவது அடக்கம்; பணிவு இல் சீர் மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர் கோத்திரம் கூறப்படும். |
உரை |
243. | எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். |
உரை |
244. | வேம்பின் இலையுள் கனியினும், வாழை தன் தீம் சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே, இனம் தீது எனினும், இயல்பு உடையார் கேண்மை மனம் தீது ஆம் பக்கம் அரிது. |
உரை |
245. | கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும்; மலை சார்ந்தும் உப்பு ஈண்டு உவரி பிறத்தலால், தம்தம் இனத்து அனையர் அல்லர்-எறி கடல் தண் சேர்ப்ப!- மனத்து அனையர், மக்கள் என்பார். |
உரை |
246. | பராஅரைப் புன்னை படு கடல் தண் சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ, நல்ல மரூஉச் செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார்? விராஅஅய்ச் செய்யாமை நன்று. |
உரை |
247. | உணர உணரும் உணர்வு உடையாரைப் புணர, புணருமாம் இன்பம்; புணரின் தெரியத் தெரியும் தெரிவு இலாதாரைப் பிரிய, பிரியுமாம் நோய். |
உரை |
248. | நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலை கலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும் மேல்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும், தான். |
உரை |
249. | கரும வரிசையால், கல்லாதார் பின்னும் பெருமை உடையாரும் சேறல்,-அரு மரபின் ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப!- பேதைமை அன்று; அது அறிவு. |
உரை |
250. | கருமமும் உள்படா, போகமும் துவ்வா, தருமமும் தக்கார்க்கே செய்யா, ஒருநிலையே முட்டு இன்றி மூன்றும் முடியுமேல், அஃது என்ப, ‘பட்டினம் பெற்ற கலம்.’ |
உரை |