மானம்
 
291. திரு மதுகையாகத் திறன் இலார் செய்யும்
பெருமிதம் கண்டக்கடைத்தும், எரி மண்டிக்
கானம் தலைப்பட்ட தீப்போல் கனலுமே-
மானம் உடையார் மனம்.
உரை
   
292. என்பாய் உகினும், இயல்பு இலார் பின் சென்று,
தம் பாடு உரைப்பரோ, தம் உடையார்? தம் பாடு
உரையாமை முன் உணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ, தாம் உற்ற நோய்?
உரை
   
293. யாம் ஆயின் எம் இல்லம் காட்டுதும்; தாம் ஆயின்,
காணவே கற்பு அழியும் என்பார்போல், நாணி,
புறங்கடை வைத்து ஈவர், சோறும்; அதனால்
மறந்திடுக, செல்வர் தொடர்பு!
உரை
   
294. இம்மையும் நன்று ஆம்; இயல் நெறியும் கைவிடாது,
உம்மையும் நல்ல பயத்தலால்,-செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்!-நன்றேகாண்,
மானம் உடையார் மதிப்பு.
உரை
   
295. பாவமும் ஏனைப் பழியும் பட வருவ,
சாயினும், சான்றவர் செய்கலார்;-சாதல்
ஒருநாள் ஒரு பொழுதைத் துன்பம்; அவைபோல்
அரு நவை ஆற்றுதல் இன்று.
உரை
   
296. மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும், கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக்கண்ணும், பெரு முத்தரையரே,
செல்வரைச் சென்று இரவாதார்.
உரை
   
297. கடை எலாம் காய் பசி அஞ்சும்; மற்று ஏனை
இடை எலாம் இன்னாமை அஞ்சும்;-புடை உலாம்
விற் புருவ வேல் நெடுங் கண்ணாய்!-தலை எலாம்
சொற் பழி அஞ்சிவிடும்.
உரை
   
298. ‘நல்லர்! பெரிது அளியர்! நல்கூர்ந்தார்!’ என்று எள்ளி,
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால், கொல்லன்
உலை ஊதும் தீயேபோல் உள் கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
உரை
   
299. நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று; நாள் நாளும்,
அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம்; எச்சத்தின்
மெல்லியர் ஆகித் தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது-நாண்.
உரை
   
300. கடமா தொலைச்சிய கான் உறை வேங்கை
இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும்;-இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார், விழுமியோர்,
மானம் அழுங்க வரின்.
உரை