புல்லறிவாண்மை
 
321. அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச் சொல்
பொருள் ஆகக் கொள்வர், புலவர்; பொருள் அல்லா
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பாற்கூழை
மூழை சுவை உணராதாங்கு.
உரை
   
322. அவ்வியம் இல்லார் அறத்து ஆறு உரைக்குங்கால்,
செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார்-
கவ்வித் தோல் தின்னும் குணுங்கர் நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல் தேற்றாதாங்கு.
உரை
   
323. இமைக்கும் அளவில் தம் இன் உயிர் போம் ஆற்றை
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும், தினைத் துணையும்
நன்றி புரிகல்லா, நாண் இல் மட மாக்கள்
பொன்றில் என்? பொன்றாக்கால் என்?
உரை
   
324. உளநாள் சிலவால்; உயிர்க்கு ஏமம் இன்றால்;
பலர் மன்னும் தூற்றும் பழியால்; பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது, எவன் ஒருவன்,
தண்டி, தனிப்பகை கோள்?
உரை
   
325. எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்று, எள்ளி,
வைதான், ஒருவன் ஒருவனை; வைய,
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான், வாழும் எனின்.
உரை
   
326. மூப்பு மேல் வாராமை முன்னே, அறவினையை
ஊக்கி, அதன்கண் முயலாதான், நூக்கி,
‘புறத்து இரு; போகு’ என்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப்படும்.
உரை
   
327. தாமேயும் இன்புறார்; தக்கார்க்கும் நன்று ஆற்றார்;
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார்; தாம் மயங்கி
ஆக்கத்துள் தூங்கி, அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார்-புல்லறிவினார்.
உரை
   
328. சிறுகாலையே தமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார், இறுகிறுகி,
‘பின் அறிவாம்’ என்று இருக்கும் பேதையார், கை காட்டும்
பொன்னும் புளி விளங்காய் ஆம்.
உரை
   
329. வெறுமை இடத்தும், விழுப் பிணிப் போழ்தும்,
மறுமை மனத்தாரே ஆகி, மறுமையை
ஐந்தை அனைத்தானும், ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவினார்.
உரை
   
330. என்னே!-மற்று இவ் உடம்பு பெற்றும் அறம் நினையார்,
கொன்னே கழிப்பர் தம் வாழ்நாளை,-அன்னோ!
அளவு இறந்த காதல் தம் ஆர் உயிர் அன்னார்க்
கொள இழைக்கும் கூற்றமும் கண்டு.
உரை