பேதைமை
 
331. கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப, ஆமை
நிலை அறியாது அந் நீர் படிந்தாடியற்றே-
கொலை வல் கொடுங் கூற்றம் கோள் பார்ப்ப, ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
உரை
   
332. பெருங் கடல் ஆடிய சென்றார், ‘ஒருங்கு உடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும்’ என்றற்றால்-
‘இல் செய் குறைவினை நீக்கி, அறவினை
மற்று அறிவாம்’ என்று இருப்பார் மாண்பு.
உரை
   
333. குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு ஐந்தும்
விலங்காமல் எய்தியக்கண்ணும், நலம் சான்ற
மை அறு தொல் சீர் உலகம் அறியாமை
நெய் இலாப் பாற்சோற்றின் நேர்.
உரை
   
334. கல் நனி நல்ல, கடை ஆய மாக்களின்-
சொல் நனி தாம் உணரா ஆயினும், இன்னினியே
நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல், என்று
உற்றவர்க்குத் தாம் உதவலான்.
உரை
   
335. பெறுவது ஒன்று இன்றியும், பெற்றானே போலக்
கறுவுகொண்டு, ஏலாதார்மாட்டும், கறுவினால்
கோத்து இன்னா கூறி உரையாக்கால், பேதைக்கு
நாத் தின்னும், நல்ல சுனைத்து!
உரை
   
336. தம்கண் அமர்பு இல்லார்பின் சென்று, தாம், ‘அவரை
எம்கண் வணக்குதும் ' என்பவர் புன் கேண்மை-
நல் தளிர்ப் புன்னை மலரும் கடற் சேர்ப்ப!-
கல் கிள்ளிக் கை இழந்தற்று.
உரை
   
337. ஆகாதுஎனினும், அகத்து நெய் உண்டாகின்,
போகாது எறும்பு புறம் சுற்றும்;-யாதும்
கொடாஅர் எனினும், உடையாரைப் பற்றி
விடாஅர், உலகத்தவர்.
உரை
   
338. நல்லவை நாள்தொறும் எய்தார்; அறம் செய்யார்;
இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார்; எல்லாம்
இனியார் தோள் சேரார்; இசைபட வாழார்;-
முனியார்கொல் தாம் வாழும் நாள்?
உரை
   
339. விழைந்து ஒருவர் தம்மை வியப்ப, ஒருவர்
விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை, தழங்குரல்
பாய் திரை சூழ் வையம் பயப்பினும், இன்னாதே-
ஆய் நலம் இல்லாதார்மாட்டு.
உரை
   
340. கற்றவும், கண் அகன்ற சாயலும், இற் பிறப்பும்,
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின்,
மைத்துனர் பல்கி, ‘மருந்தின் தணியாத
பித்தன்!’ என்று எள்ளப்படும்.
உரை