கீழ்மை
 
341. கப்பி கடவதாக் காலைத் தன் வாய்ப் பெயினும்,
குப்பை கிளைப்பு ஓவாக் கோழிபோல், மிக்க
கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும், கீழ் தன்
மனம் புரிந்தவாறே மிகும்.
உரை
   
342. ‘காழ் ஆய கொண்டு, கசடு அற்றார்தம் சாரல்,
தாழாது போவாம்’ என உரைப்பின், கீழ்தான்,
‘உறங்குவாம்’ என்று எழுந்து போமாம்; அஃது அன்றி,
மறங்குமாம், மற்று ஒன்று உரைத்து.
உரை
   
343. பெரு நடை தாம் பெறினும், பெற்றி பிழையாது
ஒரு நடையார் ஆகுவர், சான்றோர்; பெரு நடை
பெற்றக்கடைத்தும்,-பிறங்கு அருவி நல் நாட!-
வற்று ஆம் ஒரு நடை, கீழ்.
உரை
   
344. தினை அனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால்,
பனை அனைத்தா உள்ளுவர், சான்றோர்; பனை அனைத்து
என்றும் செயினும்,-இலங்கு அருவி நல் நாட!-
நன்று இல, நன்று அறியார்மாட்டு.
உரை
   
345. பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும், நாய் பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; அச் சீர்,
பெருமை உடைத்தாக் கொளினும், கீழ் செய்யும்
கருமங்கள் வேறுபடும்.
உரை
   
346. சக்கரச் செல்வம் பெறினும், விழுமியோர்
எக் காலும் சொல்லார் மிகுதிச்சொல்; எக் காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல், கீழ் தன்னை
இந்திரனா எண்ணிவிடும்.
உரை
   
347. மை தீர் பசும் பொன்மேல் மாண்ட மணி அழுத்திச்
செய்தது எனினும், செருப்புத் தன் காற்கே ஆம்;-
எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச்
செய் தொழிலால் காணப்படும்.
உரை
   
348. கடுக்கெனச் சொல்வற்று ஆம்; கண்ணோட்டம் இன்றாம்;
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும்; அடுத்து அடுத்து
வேகம் உடைத்து ஆம்;-விறல் மலை நல் நாட!-
ஏகுமாம்; எள்ளுமாம்;-கீழ்.
உரை
   
349. ‘பழையர் இவர்’ என்று பல்நாள் பின் நிற்பின்,
உழை இனியர் ஆகுவர், சான்றோர்; விழையாதே,-
கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப!-
எள்ளுவர், கீழாயவர்.
உரை
   
350. கொய் புல் கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும்,
வையம் பூண்கல்லா, சிறு குண்டை;-ஐய! கேள்;-
எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச்
செய்தொழிலால் காணப்படும்.
உரை