கயமை
 
351. ஆர்த்த அறிவினர், ஆண்டு இளையர் ஆயினும்,
காத்து ஓம்பித் தம்மை அடக்குப; மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல்
போத்து அறார், புல்லறிவினார்.
உரை
   
352. செழும் பெரும் பொய்கையுள் வாழினும், என்றும்
வழும்பு அறுக்ககில்லாவாம், தேரை; வழும்பு இல் சீர்
நூல் கற்றக்கண்ணும், நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.
உரை
   
353. கண மலை நல் நாட!-கண் இன்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால்; குணன் அழுங்கக்
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ, நா!
உரை
   
354. கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போலச் செயல் தேற்றார்; கூடி,
புதுப்பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி,
மதித்து இறப்பர், மற்றையவர்.
உரை
   
355. தளிர்மேலே நிற்பினும், தட்டாமல் செல்லா
உளி நீரர் மாதோ, கயவர்; அளி நீரார்க்கு
என்னானும் செய்யார்; எனைத்தானும் செய்பவே,
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
உரை
   
356. மலை நலம் உள்ளும், குறவன்; பயந்த
விளை நிலம் உள்ளும், உழவன்; சிறந்து ஒருவர்
செய்த நன்று உள்ளுவர் சான்றோர்; கயம், தன்னை
வைததை உள்ளிவிடும்.
உரை
   
357. ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்கு
எழுநூறு நன்றி செய்து, ஒன்று தீதுஆயின்,
எழுநூறும் தீதாய்விடும்.
உரை
   
358. ஏட்டைப் பருவத்தும் இற் பிறந்தார் செய்வன,
மோட்டிடத்தும் செய்யார், முழுமக்கள்;-கோட்டை
வயிரம் செறிப்பினும்,-வாள் கண்ணாய்!-பன்றி
செயிர் வேழம் ஆகுதல் இன்று.
உரை
   
359. ‘இன்று ஆதும்; இந் நிலையே ஆதும்; இனிச் சிறிது
நின்று ஆதும்’ என்று நினைத்திருந்து, ஒன்றி
உரையின் மகிழ்ந்து, தம் உள்ளம் வேறு ஆகி,
மரை இலையின் மாய்ந்தார், பலர்.
உரை
   
360. நீருள் பிறந்து, நிறம் பசியதுஆயினும்,
ஈரம் கிடையகத்து இல் ஆகும்;-ஓரும்
நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும்,
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.
உரை