தொடக்கம் | ||
பொதுமகளிர்
|
||
371. | விளக்கு ஒளியும், வேசையர் நட்பும், இரண்டும், துளக்கு அற நாடின், வேறு அல்ல;-விளக்கு ஒளியும் நெய் அற்றகண்ணே அறுமே; அவர் அன்பும் கை அற்றகண்ணே அறும். |
உரை |
372. | அம் கோட்டு அகல் அல்குல் ஆய் இழையாள், நம்மொடு, ‘செங்கோடு பாய்துமே’ என்றாள்மன்; செங் கோட்டின்- மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே, கால் கால்நோய் காட்டிக் கலுழ்ந்து. |
உரை |
373. | அம் கண் விசும்பின் அமரர் தொழப்படும் செங் கண் மால் ஆயினும் ஆகமன்! தம் கைக் கொடுப்பது ஒன்று இல்லாரை, கொய் தளிர் அன்னார், விடுப்பர், தம் கையால் தொழுது. |
உரை |
374. | ஆணம் இல் நெஞ்சத்து அணி நீலக் கண்ணார்க்குக் காணம் இல்லாதார் கடு அனையர்;-காணவே- செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார் அக்காரம் அன்னார், அவர்க்கு. |
உரை |
375. | பாம்பிற்கு ஒரு தலை காட்டி, ஒரு தலை தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர், விலங்கு அன்ன வெள்ளறிவினார். |
உரை |
376. | ‘பொத்த நூல் கல்லும், புணர் பிரியா அன்றிலும்போல், நித்தலும் நம்மைப் பிரியலம்’ என்று உரைத்த பொற்றொடியும் போர்த் தகர்க் கோடு ஆயினாள்; நல் நெஞ்சே! நிற்றியோ, போதியோ, நீ? |
உரை |
377. | ஆமாபோல் நக்கி, அவர் கைப் பொருள் கொண்டு, சேமாப்போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை ஏமாந்து, எமது என்று இருந்தார் பெறுபவே, தாமாம் பலரால் நகை. |
உரை |
378. | ஏமாந்த போழ்தின் இனியார் போன்று, இன்னாராய்த் தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடு ஆம், மான் நோக்கின், தம் நெறிப் பெண்டிர் தட முலை சேராரே- ‘செந் நெறிச் சேர்தும்’ என்பார். |
உரை |
379. | ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி, ஒண்ணுதலார் தேற மொழிந்த மொழி கேட்டு, தேறி, ‘எமர்’ என்று கொள்வாரும் கொள்பவே; யார்க்கும் தமர் அல்லர்; தம் உடம்பினார். |
உரை |
380. | உள்ளம் ஒருவன் உழையதா, ஒண்ணுதலார் கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி அறிந்த இடத்தும், அறியாராம்-பாவம் செறிந்த உடம்பினவர். |
உரை |