கற்புடைமகளிர்
 
381. அரும் பெறல் கற்பின் அயிராணி அன்ன
பெரும் பெயர்ப் பெண்டிர் எனினும், விரும்பிப்
பெறு நசையால், பின்நிற்பார் இன்மையே பேணும்
நறு நுதலாள்-நன்மைத் துணை.
உரை
   
382. குட நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும்,
கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும்,
கடன் நீர்மை கையாறாக் கொள்ளும் மட மொழி
மாதர்-மனை மாட்சியாள்.
உரை
   
383. நால் ஆறும் ஆறாய், நனி சிறிதாய், எப் புறனும்
மேல் ஆறு மேல் உறை சோரினும், மேலாய
வல்லாளாய், வாழும் ஊர் தற் புகழும் மாண் கற்பின்
இல்லாள் அமைந்ததே-இல்.
உரை
   
384. கட்கு இனியாள், காதலன் காதல் வகை புனைவாள்
உட்கு உடையாள், ஊராண் இயல்பினாள், உட்கி
இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள்-பெண்.
உரை
   
385. எஞ்ஞான்றும், எம் கணவர் எம் தோள்மேல் சேர்ந்து எழினும்,
அஞ் ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; எஞ்ஞான்றும்,
என்னை, கெழீஇயினர் கொல்லோ, பொருள் நசையால்
பல் மார்பு சேர்ந்து ஒழுகுவார்!
உரை
   
386. உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால்;
வள்ளன்மை பூண்டான்கண் ஒண் பொருள்; தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ;-
நாணுடையாள் பெற்ற நலம்.
உரை
   
387. கருங் கொள்ளும், செங் கொள்ளும், தூணிப் பதக்கு என்று
ஒருங்கு ஒப்பக் கொண்டானாம், ஊரன்;-ஒருங்கு ஒவ்வா
நல் நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது,
என்னையும் தோய வரும்!
உரை
   
388. கொடியவை கூறாதி;-பாண!-நீ கூறின்,
அடி பைய இட்டு ஒதுங்கிச் சென்று, துடியின்
இடக்கண் அனையம் யாம், ஊரற்கு; அதனால்,
வலக் கண் அனையார்க்கு உரை.
உரை
   
389. சாய்ப் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன்மீது
ஈப் பறக்க நொந்தேனும் யானேமன்! தீப் பறக்கத்
தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம்
நோக்கி இருந்தேனும் யான்!
உரை
   
390. ‘அரும்பு அவிழ் தாரினான் எம் அருளும்’ என்று
பெரும் பொய் உரையாதி;-பாண!-கரும்பின்
கடைக் கண் அனையம் யாம் ஊரற்கு; அதனால்,
இடைக் கண் அனையார்க்கு உரை.
உரை