காமநுதலியல்
 
391. முயங்காக்கால், பாயும் பசலை; மற்று ஊடி
உயங்காக்கால், உப்பு இன்றாம் காமம்;-வயங்கு ஓதம்
நில்லாத் திரை அலைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப!-
புல்லாப் புலப்பது ஓர் ஆறு.
உரை
   
392. தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம்
விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு, இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசைஎல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
உரை
   
393. கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர் கொள் மாலை, மலர் ஆய்ந்து, பூத் தொடுப்பாள்,
கைம் மாலை இட்டுக் கலுழ்ந்தாள், ‘துணை இல்லார்க்கு
இம் மாலை என் செய்வது!’ என்று.
உரை
   
394. செல் சுடர் நோக்கிச் சிதர் அரிக் கண் கொண்ட நீர்
மெல் விரல் ஊழ் தெறியா, விம்மி, தன் மெல் விரலின்,
நாள் வைத்து, நம் குற்றம் எண்ணும்கொல், அந்தோ! தன்
தோள் வைத்து அணைமேல் கிடந்து!
உரை
   
395. கண் கயல் என்னும் கருத்தினால், காதலி
பின் சென்றது அம்ம, சிறு சிரல்! பின் சென்றும்,
ஊக்கி எழுந்தும், எறிகல்லா-ஒண் புருவம்
கோட்டிய வில் வாக்கு அறிந்து.
உரை
   
396. அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு, அன்னோ!
பரற் கானம் ஆற்றின கொல்லோ-அரக்கு ஆர்ந்த
பஞ்சி கொண்டு ஊட்டினும், ‘பையென, பையென!’ என்று,
அஞ்சி, பின் வாங்கும் அடி!
உரை
   
397. ஓலைக் கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர்
மாலைப்பொழுதில், மணந்தார் பிரிவு உள்ளி,
மாலை பரிந்திட்டு அழுதாள்-வன முலைமேல்
கோலம் செய் சாந்தம் திமிர்ந்து.
உரை
   
398. ‘ “கடக்க அருங் கானத்து, காளைபின், நாளை
நடக்கவும் வல்லையோ?’’ என்றி-சுடர்த்தொடீஇ!-
பெற்றான் ஒருவன் பெருங் குதிரை அந் நிலையே
கற்றான், அஃது ஊருமாறு?’
உரை
   
399. ‘முலைக்கண்ணும், முத்தும், முழு மெய்யும், புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன்; கலைக் கணம்
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும், என்
பூம்பாவை செய்த குறி.
உரை
   
400. கண் மூன்று உடையானும், காக்கையும், பை அரவும்,
என் ஈன்ற யாயும், பிழைத்தது என்?-பொன் ஈன்ற
கோங்கு அரும்பு அன்ன முலையாய்!-பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி!
உரை