பெரியாரைப் பிழையாமை
 
பொருட்பால்
17. பெரியாரைப் பிழையாமை
162பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

(பொ-ள்.) பொன்னே கொடுத்தும்புணர்தற்கு அரியாரை - பொன்னையே விலையாகக்கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரானபெரியோர்களை, கொன்னே தலைக்கூடப்பெற்றிருந்தும் - பொருட் செலவில்லாமலே அவரைநட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்றிருந்தும்.நல்ல நயம் இல் அறிவினவர் அன்னோ பயனில்பொழுதாக் கழிப்பரே - சிறந்த பண்புடைமையில்லாதஅறிவினையுடைய பேதையர் ஆ, தம்முடையவாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக்கழிக்கின்றனரே!

(க-து.) பெரியார் இணக்கம்வாழ்க்கை யின்பம் மிகுத்து அதனைப்பயனுடையதாக்கும்.

(வி-ம்.) பொன்னே என்பதன்ஏகாரம் தேற்றமும், கழிப்பரே என்பதன் ஏகாரம்ஈற்றசையுமாம். அன்னோவென்னும் இடைச்சொல்இரக்கப்பொருள் குறித்தது. சான்றவர் மேன்மையில்மரீஇ இன்புறும் நயமின்மை கருதி; ‘நயமில்அறிவினவ' ரென்றார்; பயனில் பொழுது கழிக்கும்வீணரை நயமில் அறிவினவரென விதந்தது, மிக்கநயமுடைத்து. "நயனிலனென்பது சொல்லும் பயனில,பாரித்துரைக்கும் உரை"1 என்பதுதிருக்குறள்.

(2)


1. 20 : 30