(பொ-ள்.) அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் மிகைமக்களான் மதிக்கற்பால-மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும்மேன்மக்களாகிய பெரியோர்களால்மதித்தற்குரியனவாகும்; நயம் உணராக்கையறியாமாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் -நன்மையை உணர்தலில்லாத ஒழுக்கமறியாக்கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும்ஏத்துரையும், வடித்த நூலார் வையார் - தெளிந்தநூலறிவினையுடையோர் ஒரு பொருளாகமனத்துட்கொள்ளமாட்டார்கள். (க-து.) மேன்மக்கள்பால்மதிப்புப்பெற முயலுதல் வேண்டும். (வி-ம்.) ஆன்ற மதிப்பென்றது,நன்கு மதித்தலை உட்கொண்டு நின்றது. மிகைமக்கள்- மக்களில் மேம்பட்ட நன்மக்கள்;பொதுமக்களினும் மேம்பட்டோரென்று கொள்க.மாக்களென்போர் அப்பொதுமக்களினுங்கீழ்ப்பட்டோர். கை, ஈண்டு ஒழுக்கமென்னும்பொருட்டு, உணரா அறியா மக்கள் என்க; "மூவா முதலாவுலகம்"1 என்புழிப்போல.சான்றோராயின், உலகில் நிகழுந் தகுதிகளைத்தம்உள்ளத்துமதித்து மகிழ்வர்; நிகழ்வனதகுதியற்றனவாயின் அவற்றை மதியாமல்வாளாவிடுப்பரல்லது தூற்றார். நயமுணராக்கையறியாமக்களாயின், இழித்தலாயினும் அன்றிஏத்துதலாயினும் தம் வாய்விட்டுக் கூறுவர்.இவ்வியல்பு புலப்படுத்துவார், ‘இழிப்பும்எடுத்தேத்து' மென்று அவரது வாயுரைக்கண் வைத்துஆசிரியர் விளக்கின ரென்க. (3)
1. சிந். 1.
|