பெரியாரைப் பிழையாமை
 
பொருட்பால்
17. பெரியாரைப் பிழையாமை
164விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

(பொ-ள்.) விரிநிற நாகம் விடர்உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும்- படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின்வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடியஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்குஅஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும்பெருமையுடையார் செறின் உய்யார் - அருமைப்பாடுடையபாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும்,மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச்சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.

(க-து.) பெரியோர்க்குப் பிழைசெய்து பின் அதிலிருந்து தப்புதல் இயலாது.

(வி-ம்.) விடரென்பது பிளப்பு:"விடர் முகையடுக்கம்"1 என்பது அகநானூறு.இடி முழக்கத்தின் மேன் மேற் கடுமைசினமெனப்பட்டது. "அரண்சேர்ந்தும்'என்றதனால், என்றதனால், பெருமையுடையாரது சினம்அவ்வரண் முதலியவற்றையுங் கெடுக்குமென்பது பெறுதும்.பெருமையுடையார் செறின் என்றமையின் ஏனைச்சிறியோர் உய்யார் என, வினை முதல் தானேபெறப்பட்டது.

(4)


1. அகநா.47