தொடக்கம் | ||
41. | பிறக்குங்கால், ‘பேர்’ எனவும் பேரா; இறக்குங்கால், ‘நில்’ எனவும் நில்லா;- உயிர் எனைத்தும். நல்லாள் உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில், கண்டனவும் காணா கெடும். |
உரை |
42. | போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த வேர் அறின், வாடும், மரம் எல்லாம்; நீர் பாய் மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின், மன்னர் சீர் வாடிவிடும். |
உரை |
43. | ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும் காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்க தந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள் முந்து தான் செய்த வினை. |
உரை |
44. | பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்ட ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா நலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின், நண்பினார் நண்பு கெடும். |
உரை |
45. | நன்றி சாம், நன்று அறியாதார் முன்னர்; சென்ற விருந்தும் விருப்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின் பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம் ஊடல் உணராரகத்து. |
உரை |
46. | நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின், அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம் முகம் போல முன் உரைப்பது இல். |
உரை |
47. | மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும் தவம் இலார் இல்வழி இல்லை; தவமும் அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல். |
உரை |
48. | போதினான் நந்தும், புனை தண் தார்; மற்று அதன் தாதினான் நந்தும், சுரும்பு எல்லாம்; தீது இல் வினையினான் நந்துவர், மக்களும்; தம்தம் நனையினான் நந்தும் நறா. |
உரை |
49. | சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும் பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்; வரைந்தார்க்கு அரிய, வகுத்து ஊண்; இரந்தார்க்கு ஒன்று ‘இல்’ என்றல் யார்க்கும் அரிது. |
உரை |
50. | இரை சுடும், இன்புறா யாக்கையுள் பட்டால்; உரை சுடும், ஒண்மை இலாரை; வரை கொள்ளா முன்னை ஒருவன் வினை சுடும்; வேந்தனையும், தன் அடைந்த சேனை சுடும். |
உரை |