தொடக்கம் | ||
51. | எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனை உள்ளற்பொருளது, உறுதிச் சொல்; உள் அறிந்து, சேர்தற்பொருளது, அற நெறி; பல் நூலும் தேர்தற்பொருள, பொருள். |
உரை |
52. | யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால் மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின் வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை வேள்வியோடு ஒப்ப உள. |
உரை |
53. | எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான், ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச் செறிவு உடையான் சேனாபதி. |
உரை |
54. | யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு. |
உரை |
55. | கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின் ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின் என்ன கடவுளும் இல். |
உரை |
56. | கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார் செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும் புற்று அன்னர், புல்லறிவினார். |
உரை |
57. | மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும், பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்; துறப்பார், துறக்கத்தவர். |
உரை |
58. | என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்; என்றும், பிணியும், தொழில், ஒக்கும்; என்றும் கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும் சாவாரும் என்றும் உளர். |
உரை |
59. | இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்; முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்; தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்; இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும் முனியா ஒழுக்கத்தவன். |
உரை |
60. | ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்று அவன் கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற நகை ஆகும், நண்ணார்முன் சேறல்; பகை ஆகும், பாடு அறியாதானை இரவு. |
உரை |