தொடக்கம் | ||
61. | நெய் விதிர்ப்ப நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து வழுத்த வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி நன்று ஊட்ட, நந்தும் விருந்து. |
உரை |
62. | பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன் கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின் நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான், போற்றாதார் போற்றப்படும். |
உரை |
63. | கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள் உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி, நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும் பாடு எய்தும் பாட்டே உள. |
உரை |
64. | திரி அழல் காணின், தொழுப; விறகின் எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில் கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான் இளமை பாராட்டும், உலகு. |
உரை |
65. | கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின் முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம் ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்று அவள் துன்புறுவாள் ஆகின், கெடும். |
உரை |
66. | ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப் புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின் அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம் வரிசையான் இன்புறூஉம், மேல். |
உரை |
67. | பின்னவாம், பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும் முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும் அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம், அவா இல்லார் செய்யும் வினை. |
உரை |
68. | கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்; வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்து வைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின் நல்லர், சிதையாதவர். |
உரை |
69. | மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன் முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீர்ப் பிலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு வானம் உரைத்துவிடும். |
உரை |
70. | பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன் மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின் ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும் சோற்றான் வீறு எய்தும், குடி. |
உரை |