தொடக்கம் | ||
71. | ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன் ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம் வளத்து அனைய, வாழ்வார் வழக்கு. |
உரை |
72. | ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும் நாழிகையானே நடந்தன; தாழீயா, தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார் வெஞ் சொலால் இன்புறுவார். |
உரை |
73. | கற்றான் தளரின், எழுந்திருக்கும்; கல்லாத பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம் ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய் பொய்யா வித்து ஆகிவிடும். |
உரை |
74. | தேவர் அனையர், புலவரும்; தேவர் தமர் அனையர், ஓர் ஊர் உறைவார்; தமருள்ளும் பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர் கற்றாரைக் காதலவர். |
உரை |
75. | தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன், ‘சொல்’ என்ற போழ்தே, பிணி உரைக்கும்; நல்லார், ‘விடுக!’ என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான், ‘தா’ எனின், தாயம் வகுத்து! |
உரை |
76. | நாக்கின் அறிப, இனியவை; மூக்கினான் மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும் கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து, எண்ணினான் எண்ணப்படும். |
உரை |
77. | சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்; தாவாத இல்லை, வலிகளும்; மூவா இளமை இயைந்தாரும் இல்லை; வளமையில் கேடு இன்றிச் சென்றாரும் இல். |
உரை |
78. | சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்ற நீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும் ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண் மகிழான் அறிப, நறா. |
உரை |
79. | நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப் படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ மாறு உள் நிறுக்கும் துணிபு? |
உரை |
80. | கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின், உயிர் இடையிட்ட விடுக்க! எடுப்பின், கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின், வெகுளி கெடுத்துவிடல்! |
உரை |