81. நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்;
குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்;
வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்
பண்டத்தின்கீழ்ச் சாம், பகடு.
உரை
   
82. நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச்
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ் ஊரும் ஊர்.
உரை
   
83. கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்;
மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே,
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்.
உரை
   
84. நீரான் வீறு எய்தும் விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும்.
உரை
   
85. ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும்
அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்
நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்,
கேளிர் ஒரீஇவிடல்.
உரை
   
86. கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;
தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும், சிறியரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும், பகை.
உரை
   
87. பெருக்குக, நட்டாரை நன்றின்பால் உய்த்து!
தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!
அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,
செல்லா இடத்துச் சினம்!
உரை
   
88. மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரை நிற்பர் நற் பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு.
உரை
   
89. மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப, அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம், சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண்.
உரை
   
90. பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும்,
பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும்,
சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும்,
கொன்றான்மேல் நிற்கும், கொலை.
உரை