தொடக்கம் | ||
91. | வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார் இன்கண் பெருகின், இனம் பெருகும்; சீர் சான்ற மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண் கயம் பெருகின், பாவம் பெரிது. |
உரை |
92. | இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்; வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம், தமர் அல்லார் கையகத்து ஊண். |
உரை |
93. | எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக் கல்லா வளரவிடல் தீது; நல்லார் நலம் தீது, நாண் அற்று நிற்பின்; குலம் தீது, கொள்கை அழிந்தக்கடை. |
உரை |
94. | ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும் கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான் உள் நாட்டம் இன்மையும் இல். |
உரை |
95. | கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை கள்வன் அறிந்துவிடும். |
உரை |
96. | வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச் சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய பரப்புச் சொல் சான்றார் வாய்த் தோன்றா; கரப்புச் சொல் கீழ்கள் வாய்த் தோன்றிவிடும். |
உரை |
97. | வாலிழையார் முன்னர் வனப்பு இலான் பாடு இலன்; சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்; கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார், பேதையார், முன்னர்ப்படின். |
உரை |
98. | மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்; பூசிக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்; பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை மாசுடைமை காட்டிவிடும். |
உரை |
99. | எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை; புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய யாழ் ஒக்கும், நட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும், பண்பு உடையாள் இல்லா மனை. |
உரை |
100. | ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத் தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும், உரன் சிறிதுஆயின், பகை. |
உரை |