101. வைததனால் ஆகும் வசையே வணக்கம் அது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.
உரை
   
102. ஒருவன் அறிவானும் எல்லாம் யாது ஒன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.
உரை
   
103. மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-
தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,
ஓதின், புகழ் சால் உணர்வு.
உரை
   
104. இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பு இலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவு இலா வீடாய் விடும்.
உரை