1. அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,
பெரியதன் ஆவி பெரிது.
உரை
   
2. கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லர்!
வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை,
கனா முந்துறாத வினை.
உரை
   
3. கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன்
சொல்லிய நல்லவும், தீய ஆம்,-எல்லாம்
இவர் வரை நாட!-தமரை இல்லார்க்கு
நகரமும் காடு போன்றாங்கு.
உரை
   
4. கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்;-வேட்கையால்
வண்டு வழிப்படரும் வாள் கண்ணாய்!-தோற்பன
கொண்டு புகாஅர், அவை.
உரை
   
5. புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்க
பூம் புனல் ஊர!-பொது மக்கட்கு ஆகாதே;
பாம்பு அறியும் பாம்பின கால்.
உரை
   
6. ஈனுலகத்துஆயின், இசை பெறூஉம்; அஃது இறந்து,
ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்
வேள் வாய் கவட்டை நெறி.
உரை
   
7. ஆஅம் எனக்கு எளிது’ என்று உலகம் ஆண்டவன்,
மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
தா அம் தர வாரா நோய்.
உரை
   
8. எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச்
செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி-
மான் சேர்ந்த நோக்கினாய்!-ஆங்க; அணங்கு ஆகும்,
தான் செய்த பாவை தனக்கு.
உரை
   
9. திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார்,
‘வருந்தினார்’ என்றே வயப்படுவது உண்டோ?
அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக்கண்ணும்,
பொருந்தா மண், ஆகா, சுவர்.
உரை
   
10. பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று,
திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே,
இரு தலைக் கொள்ளி என்பார்.
உரை