11. மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும்,
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்க
இன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும்,
மன நல ஆகாவாம் கீழ்.
உரை
   
12. விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும்; தொழுநையுள்,
மாலையும் மாலுள் மயக்குறுத்தாள்;-அஃதால், அச்
சால்பினைச் சால்பு அறுக்குமாறு.
உரை
   
13. பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி,
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே-
கழி விழாத் தோள் ஏற்றுவார்.
உரை
   
14. தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் என வேண்டா;
யார் நட்பது ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;-
கான் அட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ,
நாய், நட்டால், நல்ல முயல்?
உரை
   
15. அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும், தீங்குறுதல் காண்டுமால்;-பொங்கி,
அறைப் பாய் அருவி அணி மலை நாட!-
உறற்பால யார்க்கும் உறும்.
உரை
   
16. நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை,
கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;-
பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ,
தம் கன்று சாக் கறப்பார்?
உரை
   
17. உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்,
கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்;
‘நிலைப் பொருள்’ என்று அதனை நீட்டித்தல் வேண்டா;-
புலைப் பொருள் தங்கா, வெளி.
உரை
   
18. ‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல்?
உரை
   
19. கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்; ஒறுத்து ஆற்றின்,-
வான் ஓங்கு உயர் வரை வெற்ப!-பயம் இன்றே;
தான் நோன்றிட வரும், சால்பு.
உரை
   
20. காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன்
ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்-
ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப,
தாய் அணல் தான் சுவைத்தற்று.
உரை