தொடக்கம் |
|
|
21. | ‘உரை முடிவு காணான்; இளமையோன்!’ என்ற நரை முது மக்கள் உவப்ப, நரை முடித்து, சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை கல்லாமல் பாகம் படும். | |
|
உரை
|
|
|
|
|
22. | உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லி நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப் பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!- நரிக் கூக் கடற்கு எய்தாவாறு. | |
|
உரை
|
|
|
|
|
23. | அருமையுடைய பொருள் உடையார், தங்கண் கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல் நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு, தேரை வழிச் சென்றார் இல். | |
|
உரை
|
|
|
|
|
24. | இசைவ கொடுப்பதூஉம், ‘இல்’ என்பதூஉம், வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி, பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின், நசை கொன்றான் செல் உலகம் இல். | |
|
உரை
|
|
|
|
|
25. | உரிதினில் தம்மோடு உழந்தமை கண்டு, பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித் தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின், பாம்பு காண்பாரும் உடைத்து. | |
|
உரை
|
|
|
|
|
26. | விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி, படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப் பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி, கன்று அடியுள் ஆழ்ந்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
27. | தேர்ந்து, கண்ணோடாது, தீவினையும் அஞ்சலராய், சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்த விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும் நரகர்கட்கு இல்லையோ நஞ்சு? | |
|
உரை
|
|
|
|
|
28. | தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப்பட்டாரைத் தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே- உண் ஓட்டு அகல் உடைப்பார். | |
|
உரை
|
|
|
|
|
29. | ‘முழுதுடன் முன்னே வகுத்தவன்’ என்று, தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ, அல்லல்?- இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம் எழுதினான் ஓலை பழுது. | |
|
உரை
|
|
|
|
|
30. | நிறையான் மிகுகலா நேரிழையாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ- வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால் திருந்துதல் என்றுமோ இல். | |
|
உரை
|
|
|
|