தொடக்கம் |
|
|
31. | ‘எமர் இது செய்க, எமக்கு!’ என்று, வேந்தன் தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு வேலின்வாய் ஆயினும், வீழ்வார்; மறுத்து உரைப்பின்,-‘ ஆல்’ என்னின், ‘பூல்’ என்னுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
32. | தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப் பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்ப, பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்கு ஆணியின் குத்தே வலிது. | |
|
உரை
|
|
|
|
|
33. | வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும், நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;- என் செய்து அகப்பட்டக்கண்ணும், எடுப்புபவோ, துஞ்சு புலியைத் துயில்? | |
|
உரை
|
|
|
|
|
34. | பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு, கரந்து மறைக்கலும் ஆமோ?-நிரந்து எழுந்த வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்!-விண் இயங்கும் ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல். | |
|
உரை
|
|
|
|
|
35. | ‘தமன்’ என்று இரு நாழி ஈத்தவன் அல்லால், ‘நமன்’ என்று, காயினும், தான் காயான், மன்னே, ‘அவன்’ இவன்’ என்று உரைத்து எள்ளி;-மற்று யாரே, நம நெய்யை நக்குபவர்? | |
|
உரை
|
|
|
|
|
36. | ‘மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரை ஒற்கப்பட முயறும்’ என்றல் இழுக்கு ஆகும்;- நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல் கல் கிள்ளி, கை உய்ந்தார் இல். | |
|
உரை
|
|
|
|
|
37. | வைத்ததனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத் துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத் தக்குழி நோக்கி, அறம் செய்க!-அஃது அன்றோ, எய்ப்பினில் வைப்பு என்பது? | |
|
உரை
|
|
|
|
|
38. | உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான் கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,- இழவு அன்று, எருது உண்ட உப்பு. | |
|
உரை
|
|
|
|
|
39. | நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின், ‘காட்டி, களைதும்’ என வேண்டா;-ஓட்டி இடம்படுத்த கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டை உடம்படுத்து வேள்வு உண்டார் இல். | |
|
உரை
|
|
|
|
|
40. | பயன் நோக்காது, ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி, இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல் ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!- கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு | |
|
உரை
|
|
|
|