71. வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார்,
புன் பாட்டவர் பகை கோடல் பயம் இன்றே;-
கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!-
வெண் பாட்டம் வெள்ளம் தரும்.
உரை
   
72. நடலை இலர் ஆகி நன்று உணராராய
முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள்,
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்-
கடலுளால் மா வடித்தற்று.
உரை
   
73. ‘யானும்’ மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால்,
ஈனம் செயக் கிடந்தது இல்’ என்று, கூனல்
படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே-
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு.
உரை
   
74. கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக
நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,-
எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து
உண்ணி பறித்துவிடல்.
உரை
   
75. பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்துவிடுதல்,-பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர!-அது அன்றோ,
நாய்மேல் தவிசு இடும் ஆறு?
உரை
   
76. செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தால்,
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ?-
உருத்த சுணங்கின் ஒளியிழாய்!- கூரிது,
எருத்து வலியதன் கொம்பு.
உரை
   
77. அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே-
கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய்,
அம்பு விட்டு ஆக் கறக்குமாறு.
உரை
   
78. இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும்,
உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்கு-
அணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும்,
மணி மணியாகி விடும்.
உரை
   
79. கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்
களிகள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல்.
உரை
   
80. காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல்.
உரை