81. நாடி, ‘நமர்’ என்று நன்கு புறந்தந்தாரைக்
கேடு பிறரொடு சூழ்தல்,-கிளர் மணி
நீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்த
கோடு குறைத்துவிடல்.
உரை
   
82. பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார்
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ்
அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும்,
பெரிது ஆள்பவனே பெரிது.
உரை
   
83. உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
தற் செய்ய, தானே கெடும்.
உரை
   
84. ‘இது மன்னும் தீது’ என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும்;-மது நெய்தல்
வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!-
தீ நாள் திரு உடையார்க்கு இல்.
உரை
   
85. ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா,
கட்டங்க வெல் கொடி கொண்டானும், கொண்டானே;-
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே,
நட்டாரை ஒட்டியுழி.
உரை
   
86. உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம்,
புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்-
நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு,
கரை இருந்தார்க்கு எளிய, போர்.
உரை
   
87. கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால்,
பார்ப்பாரும் தின்பர், உடும்பு.
உரை
   
88. தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்ப, தாம்;-தெற்ற
அறை ஆர் அணி வளையாய்!-தீர்தல் உறுவார்
மறையார், மருத்துவர்க்கு நோய்.
உரை
   
89. கண்ணின் மணியேபோல் காதலால் நட்டாரும்,
உன்னும் துணையும் உளரா, பிறர் ஆவர்;-
எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும்,
உண்ணும் துணைக் காக்கும், கூற்று.
உரை
   
90. செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும்,
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,
அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே-
வெந் நீரில் தண்ணீர் தெளித்து.
உரை