91. பெரு மலை நாட!-பிறர் அறியலாகா
அரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையை
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று.
உரை
   
92. பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்
உரை
   
93. சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
முறைமைக்கு மூப்பு இளமை இல்.
உரை
   
94. நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால்;
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?-
கற்பால் இலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
சொல் சோர்விலாதாரோ இல்.
உரை
   
95. தத்தமக்குக் கொண்ட குறியோ தவம் அல்ல;
செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச்
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே-
நுகத்துப் பகல் ஆணி போன்று.
உரை
   
96. மாடம் இடிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
கூடகாரத்திற்குத் துப்பு ஆகும்;-அஃதேபோல்,
பீடு இலாக்கண்ணும், பெரியார் பெருந் தகையர்;-
ஈடு இல்லதற்கு இல்லை, பாடு.
உரை
   
97. தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால்,
கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றான்;
விழைந்தவரை வேறன்றிக் கொண்டு ஒழுகல் வேண்டா;-
பழம் பகை நட்பு ஆதல் இல்.
உரை
   
98. வெள்ளம் பகை வரினும், வேறு இடத்தார் செய்வது என்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு-
புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ,
உள் இல்லத்து உண்ட தனிசு.
உரை
   
99. அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்தாரே-
கொல்லிமேல் கொட்டு வைத்தார்.
உரை
   
100. நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார்,
செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா; ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவி
குறங்கு அறுப்பச் சோரும் குடர்.
உரை