101. பரியப் படுமவர் பண்பு இலரேனும்,
திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப்
பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ,
ஊர் அறிய நட்டார்க்கு உணா?
உரை
   
102. ‘எனக்குத் தகவு அன்றால்’ என்பதே நோக்கி,
தனக்குக் கரி ஆவான் தானாய், தவற்றை
நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும்;-காணார்
எனச் செய்யார், மாணா வினை.
உரை
   
103. நிரம்பி நிரையத்தைக் கண்டு, அந் நிரையம்
வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,-
கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால்,
அடி கெட மன்றிவிடல்.
உரை
   
104. நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின்
வல்லிதின் நாடி, வலிப்பதே-புல்லத்தைப்
புல்லம் புறம் புல்லுமாறு.
உரை
   
105. சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால்,
செயிர் அறு செங்கோல் செலீஇயினான்;-இல்லை,
உயிர் உடையார் எய்தா வினை.
உரை
   
106. வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று,
வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட,
பொரு அறு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால்,
உருவு திரு ஊட்டுமாறு.
உரை
   
107. பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,
கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா
வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!-
மரம் குறைப்ப மண்ணா, மயிர்.
உரை
   
108. உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்,
எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு.
உரை
   
109. மெய்யா உணரின், பிறர் பிறர்க்குச் செய்வது என்?-
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி!- எக்காலும்
செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம்,
பெய்யாது எனினும், மழை.
உரை
   
110. கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,-
முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என்,
வல்லை, அரசு ஆட்கொளின்?
உரை