111. நன்றே, ஒருவன்-துணைக்கோடல்; பாப்பு இடுக்கண்
ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும்
குன்றக நல் நாட!-கூறுங்கால், இல்லையே,
ஒன்றுக்கு உதவாத ஒன்று.
உரை
   
112. ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரை
மாண்டிலர் என்றே மறுப்பக் கிடந்ததோ?
பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்ட
பறை அறையாப் போயினார் இல்.
உரை
   
113. ‘இடையீடு உடையார் இவர் அவரோடு’ என்று,
தலையாயார் ஆய்தந்தும் காணார்; கடையாயார்
முன் நின்று கூறும் குறளை தெறிதலால்,-
பின் இன்னா, பேதையார் நட்பு.
உரை
   
114. தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்,
இற்றே அவரைத் தெளியற்க; மற்றவர்
யாவரே வேண்டினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே,
தேவரே தின்னினும் வேம்பு.
உரை
   
115. அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்,
புகல் அரியார் புக்கு, அவர் தாமே இகலினால்
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல்-அது அன்றோ,
பாண் சேரிப் பல் கிழிக்குமாறு.
உரை
   
116. ‘அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்’ என்று,
தமர் மறையாக் கூழ் உண்டு சேறல் அதுவே-
மகன் மறையாத் தாய் வாழுமாறு.
உரை
   
117. தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல்.
உரை
   
118. கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின்,
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!-
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே,
அட்டாரை ஒட்டாக் கலம்.
உரை
   
119. ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
புல் மேயாது ஆகும், புலி.
உரை
   
120. பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்.
உரை