121. காடு உறை வாழ்க்கைக் கடு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும்
கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச்
செய் உளது ஆகும், மனம்.
உரை
   
122. விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்;
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவி
தாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே,
பேஎயொடானும் பிரிவு.
உரை
   
123. கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள்
ஒருவழி நீடி உறைதலோ, துன்பம்;-
பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல்
திருவொடும் இன்னாது, துச்சு.
உரை
   
124. தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம்
எங்கெங்கும் நீக்கற்கு இடை புகுதல்-எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது,
அயல் வளி தீர்த்துவிடல்.
உரை
   
125. உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,
நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,-
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே,
சுரை ஆழ, அம்மி மிதப்பு.
உரை
   
126. ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க!
போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டானால்;-
நோற்ற பெருமை உடையாரும், கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல்.
உரை
   
127. ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்;
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;-
ஏ கல் மலை நாட!-என் செய்து, ஆங்கு என் பெறினும்,
ஆகாதார்க்கு ஆகுவது இல்.
உரை
   
128. காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, ‘அவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கு!’ என்று அமர்ந்து இருத்தல்,-
மாப் புரை நோக்கின் மயில் அன்னாய்!-பூசையைக்
காப்பிடுதல், புன் மீன் தலை.
உரை
   
129. தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு.
உரை
   
130. நெடியது காண்கலாய்; நீ அளியை;-நெஞ்சே!-
கொடியது கூறினாய் மன்ற;- அடியுளே,
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும்.
உரை