131. செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்,
தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம்
வீரம் சொல்லாமையே வீழ்க!- களிப்பினும்
சோரப் பொதியாதவாறு.
உரை
   
132. செய்த கருமம் சிறிதானும் கைகூடா;
மெய்யா உணரவும் தாம் படார்; எய்த
நலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப்
புள் அரைக்கால் விற்பேம்’ எனல்.
உரை
   
133. ‘பண்டு இன்னர்’ என்று தமரையும், தம்மையும்,
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்,
விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின்,-அஃது அன்றோ,
உண்ட இல் தீ இடுமாறு.
உரை
   
134. பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச்
சில நாள் சிறந்தவற்றால் செய்க!-முலை நெருங்கி
நைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம்
செய்வது செய்யாது, கேள்.
உரை
   
135. தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்,
பரியாதார் போல இருக்க! பரிவு இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவாரே-
அம்பலம் தாழ்க் கூட்டுவார்.
உரை
   
136. அரு விலை மாண் கலனும், ஆன்ற பொருளும்,
திரு உடையராயின், திரிந்தும் வருமால்;-
பெரு வரை நாட!-பிரிவு இன்று, அதனால்;
திருவினும் திட்பமே நன்று.
உரை
   
137. தோற்றம் அரிது ஆய மக்கட் பிறப்பினால்,
ஆற்றும் துணையும் அறம் செய்க!-மாற்று இன்றி,
அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து,
துஞ்ச வருமே, துயக்கு!
உரை
   
138. கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், அல்லாதான்
தெற்ற உணரான், பொருள்களை; எற்றே,
அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை;-
நாவற்கீழ்ப் பெற்ற கனி.
உரை
   
139. பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா,
சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்கு
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப!-புலம் புகின்,
தீ நாய் எடுப்புமாம் எண்கு.
உரை
   
140. மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ,
பள்ளியுள் ஐயம் புகல்.
உரை