தொடக்கம் |
|
|
151. | வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ, நாய் பெற்ற தெங்கம்பழம். | |
|
உரை
|
|
|
|
|
152. | ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும், ‘கோவிற்குக் கோவலன்’ என்று, உலகம் கூறுமால்; தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா;-தீங்கு உரைக்கும் நாவிற்கு நல்குரவு இல். | |
|
உரை
|
|
|
|
|
153. | பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு வேந்தன் வினாயினான், மாந்தரை; சான்றவன், கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின் கண்டதூஉம் எண்ணிச் சொலல்! | |
|
உரை
|
|
|
|
|
154. | இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும், அஞ்சி அகப்படுவர், ஆற்றாதார்;-அஞ்சி இருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள் இருளின் இருந்தும் வெளி. | |
|
உரை
|
|
|
|
|
155. | ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து, ஆற்றாதார் வேந்தனை நோவது-சேற்றுள் வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும் எழாஅமைச் சாகாடு எழல். | |
|
உரை
|
|
|
|
|
156. | தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப் பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம் வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே, நாய் பின்னதாகத் தகர். | |
|
உரை
|
|
|
|
|
157. | வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி, மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,- புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!- வலி அலாம் தாக்கு வலிது. | |
|
உரை
|
|
|
|
|
158. | ‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம் பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள் கட்டி அடையைக் களைவித்து, கண் செரீஇ, இட்டிகை தீற்றுபவர். | |
|
உரை
|
|
|
|
|
159. | அறம் செய்பவற்கும், அறவுழி நோக்கி, திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;- புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய, அல்லவை நீங்கிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
160. | வருவாய் சிறிதுஎனினும், வைகலும் ஈண்டின், பெரு வாய்த்தா நிற்கும், பெரிதும்;-ஒருவாறு ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்; துளி ஈண்டில், வெள்ளம் தரும். | |
|
உரை
|
|
|
|