161. ‘இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்?
தனியேம் யாம்!’ என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா;
முனிவு இலராகி முயல்க!-முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.
உரை
   
162. கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;-
வாய்ப்பத் தான் மாழ்கியக்கண்ணும், பெருங் குதிரை,
யாப்புள், வேறு ஆகிவிடும்.
உரை
   
163. தோற்றம் பெரிய நசையினார், அந் நசை
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றின்
கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால்,
உயவுநெய்யுள் குளிக்குமாறு.
உரை
   
164. செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி,
அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின்
உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார்,
தயிர் சிதைத்து, மற்றொன்று அடல்.
உரை
   
165. மறு மனத்தான் அல்லாத மா நலத்த வேந்தன்
உறு மனத்தான் ஆகி ஒழுகின்,-தெறு மனத்தார்
பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?-
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்.
உரை
   
166. ‘தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;
மாற்றத்தால் செற்றார்’ என, வலியார் ஆட்டியக்கால்,-
ஆற்றாது அவர் அழுத கண்ணீரவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்.
உரை
   
167. உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன
கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல்
ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு.
உரை
   
168. ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கற்கு உறுதி மொழியற்க! மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே,
உண்டது நீலம் பிறிது.
உரை
   
169. கரப்புடையார் வைத்த, கடையும் உதவா,
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
சுரத்திடைத் தீரப் பெயல்.
உரை
   
170. உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவ,
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்தி
இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!-
பெரும் பழியும் பேணாதார்க்கு இல்.
உரை