தொடக்கம் |
|
|
171. | மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும், பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள் பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;- ஒன்று உறா முன்றிலோ இல். | |
|
உரை
|
|
|
|
|
172. | உறு மகன் ஆக ஒருவனை நாட்டி, பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல் சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை;-அதுவே, குறுமக்கள் காவு நடல். | |
|
உரை
|
|
|
|
|
173. | அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன ஆவதே போன்று கெடும். | |
|
உரை
|
|
|
|
|
174. | ‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி, தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல் மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!- கணையிலும் கூரியவாம் கண். | |
|
உரை
|
|
|
|
|
175. | வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து வாள் ஆண்மையானும் வலியராய், தாளாண்மை தாழ்க்கும் மடி கோள் இலராய்,-வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று. | |
|
உரை
|
|
|
|
|
176. | ‘உரைத்தவர் நாவோ பருந்து எறியாது’ என்று, சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால், இழைத்தது இகவாதவரைக் கனற்றி, பலிப் புறத்து உண்பர் உணா. | |
|
உரை
|
|
|
|
|
177. | களமர் பலரானும் கள்ளம் படினும், வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளை நெல் அரிநர் அணை திறக்கும் ஊர!-அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? | |
|
உரை
|
|
|
|
|
178. | ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும், ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!- பூண் தகு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமை வேண்டியது எல்லாம் தரும். | |
|
உரை
|
|
|
|
|
179. | யாவரேயானும், இழந்த பொருள் உடையார், தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவை படத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான் குடத்துள்ளும் நாடிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
180. | வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப, உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் தெள்ளி, மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்- பறைக்கண் கடிப்பு இடுமாறு. | |
|
உரை
|
|
|
|