தொடக்கம் |
|
|
181. | வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டால், ‘யாம் ஒன்றும் பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை ஐயம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ, ‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
182. | கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப் பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?- விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார், இழித்தக்க காணின், கனா. | |
|
உரை
|
|
|
|
|
183. | வளமையும், தேசும், வலியும், வனப்பும், இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா, மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால்,-கூற்றம் குதித்து உய்ந்து அறிவாரோ இல். | |
|
உரை
|
|
|
|
|
184. | பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதை, தன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!- மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும். | |
|
உரை
|
|
|
|
|
185. | அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும், புறத்தால் பொலிவுறல் வேண்டும்;-எனைத்தும் படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரை உண்டி வினவுவார் இல். | |
|
உரை
|
|
|
|
|
186. | கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;- நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும், மூத்தானே, ஆடு மகன். | |
|
உரை
|
|
|
|
|
187. | செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள் ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத் திருத்தலும் ஆகாது, தீது ஆம்;-அதுவே எருத்திடை வைக்கோல் தினல். | |
|
உரை
|
|
|
|
|
188. | இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும், தம்மைப் பிரியார் தமர்போல் அடைந்தாரின், செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?- மைம்மைப்பின் நன்று, குருடு. | |
|
உரை
|
|
|
|
|
189. | எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர் வைதாராக் கொண்டு விடுவர்மன்; அஃதால்- புனல் பொய்கை ஊர!-விளக்கு எலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
190. | தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும், தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான் ஊர் மிகின், இல்லை, கரியே;-ஒலித்து உடன் நீர் மிகின், இல்லை, சிறை. | |
|
உரை
|
|
|
|