201. மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்,
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி,
பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார்-குறைப்பர்,
தம் மேலே வீழப் பனை.
உரை
   
202. மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலே
துடும்பல் எறிந்துவிடல்.
உரை
   
203. சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட இழுக்கம் பலவானால், பட்ட
பொறியின் வகைய, கருமம் அதனால்,-
அறிவினை ஊழே அடும்.
உரை
   
204. கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்,
என்றும், சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்;
ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்-
குன்றின்மேல் இட்ட விளக்கு.
உரை
   
205. ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை,
ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப்
படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்-
தொடற்பாலார்கண்ணே தொடும்.
உரை
   
206. முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்,
இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து
நேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம்
நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு.
உரை
   
207. அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று;
சிறியர் எனற்பாடும் செய்யும்;-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப!-குழுவத்தார் மேயிருந்த,
என்று ஊடு அறுப்பினும், மன்று.
உரை
   
208. இல்வாழ்க்கையானும் இலிங்கானும் மேற்கொள்ளார்,
நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியாதவரே-
இரு தலையும் காக் கழிப்பார்.
உரை
   
209. முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது-மன்னும்
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!-
மன்றத்து மையல் சேர்ந்தற்று.
உரை
   
210. தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால்,
நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல்,-
மான் அமர்க் கண்ணி!-மறந்தும் பரியலரால்;-
கானகத்து உக்க நிலா.
உரை