221. முன்னும் ஒரு கால் பிழைப்பு ஆன்றார் ஆற்றவும்,
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ?-இன் இசை
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர!-ஈனுமோ,
வாழை இரு கால் குலை?
உரை
   
222. தொடித் தோள் மடவார் துணை முலை ஆகம்
மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறி அல்ல சொல்லல் நீ, பாண!-அறி துயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது.
உரை
   
223. ஆணம் உடைய அறிவினார் தம் நலம்
மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,-
மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர்,
யானையால் யானை யாத்தற்று.
உரை
   
224. தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும்,
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்,
கரப்புடை உள்ளம் கனற்றுபவரே-
செருப்பிடைப் பட்ட பரல்.
உரை
   
225. விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது,
உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,-
மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!-
கடல் படா எல்லாம் படும்.
உரை
   
226. செயிர் அறு செங்கோல் சின வேந்தன் செய்கை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
செவ் வாய் மணி முறுவல் சின்மொழி!-செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்.
உரை
   
227. புரையக் கலந்தவர்கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க!-
வரையக நாட!-விரையின், கருமம்
சிதையும்; இடர் ஆய்விடும்.
உரை
   
228. கற்றார் பலரைத் தன் கண்ணாக இல்லாதான்
உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண், தேற்றம்-
மரையா துணை பயிரும் மா மலை நாட!-
சுரையாழ் நரம்பு அறுத்தற்று.
உரை
   
229. நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;-
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர்
கயவர்க்கு உரையார், மறை.
உரை
   
230. மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்,
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்;
சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!-
இனம் கழு ஏற்றினார் இல்.
உரை