231. தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்,
‘போர் ஏற்றும்’ என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ?
யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால்,
ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு.
உரை
   
232. தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின்,
அமராததனை அகற்றலே வேண்டும்;-
அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை,
தமவேயும், கொள்ளாக் கலம்.
உரை
   
233. ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,-
போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
சாம் மா கண் காணாதவாறு.
உரை
   
234. தீயன அல்ல செயினும், திறல் வேந்தன்
காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்;-காயும்
புலி முன்னர்ப் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே,
வலி முன்னர் வைப் பாரம் இல்.
உரை
   
235. சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார்,
பெரிது ஆய கூழும் பெறுவர்;-அரிது ஆம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்,
கிடப்புழியும் பெற்றுவிடும்.
உரை
   
236. இனியாரை உற்ற இடர் தீர் உபாயம்
முனியார் செயினும், மொழியால் முடியா;-
துனியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
பனியால் குளம் நிறைதல் இல்.
உரை
   
237. முயறலே வேண்டா; முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!-
கயல் இகல் உண் கண்ணாய்!-கரியவரோ வேண்டா;
அயல் அறியா அட்டூணோ இல்.
உரை
   
238. நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய
மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை
அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண்
துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்?
உரை
   
239. உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்.
உரை
   
240. மறாஅதவனும், பலர் ஒன்று இரந்தால்,
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,
கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,
இரந்து ஊட்குப் பன்மையோ தீது.
உரை