தொடக்கம் |
|
|
241. | மொய் கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப் பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?- மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர், கை உண்டும், கூறுவர் மெய். | |
|
உரை
|
|
|
|
|
242. | பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர் அருத்தம், அடி நிழலாரை வருத்தாது, கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ, வண்டு தாது உண்டுவிடல். | |
|
உரை
|
|
|
|
|
243. | கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர், தெற்ற;- அறை கல் அருவி அணி மலை நாட!- நிறை குடம் நீர் தளும்பல் இல். | |
|
உரை
|
|
|
|
|
244. | தெரிவு உடையாரோடு, தெரிந்து உணர்ந்து நின்றார், பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்ற;- விரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்ப!- அரிவாரைக் காட்டார், நரி. | |
|
உரை
|
|
|
|
|
245. | தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன, வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?- மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ, நந்து உழுத எல்லாம் கணக்கு? | |
|
உரை
|
|
|
|
|
246. | ‘நினைத்தது இது’ என்று, அந் நீர்மையைப் பார்த்து, மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்த குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!- கடிஞையுள் கல் இடுவார் இல். | |
|
உரை
|
|
|
|
|
247. | தம் தீமை இல்லவர், நட்டவர் தீமையையும், ‘எம் தீமை’ என்றே உணர்ப, தாம்;-அம் தண் பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!- ஒருவர் பொறை, இருவர் நட்பு. | |
|
உரை
|
|
|
|
|
248. | அம் கோல் அவிர்தொடி!-ஆழியான் ஆயினும், செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவர், வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும்; தண் கோல் எடுப்புமாம் மொய். | |
|
உரை
|
|
|
|
|
249. | நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப் புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார்- புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி, இடைக் கலத்து எய்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
250. | தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து, போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண் நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும், மூக்கு அற்றதற்கு இல், பழி. | |
|
உரை
|
|
|
|