251. கண்டு அறியார் போல்வர் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேயாய்,
விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ,
விண்டற்கு விண்டல் மருந்து.
உரை
   
252. ‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும்,
தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
உடையானைக் கௌவிவிடும்.
உரை
   
253. ‘நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்’ என்று, ஒன்று
உளைய உரையாது, உறுதியே கொள்க!-
வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து,
தொளை எண்ணார், அப்பம் தின்பார்.
உரை
   
254. வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?-
மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை, அரண்.
உரை
   
255. சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம்
இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து
இடர் இன்றி ஏமார்ந்திருந்தாரே, என்றும்
கடலுள் துலாம் பண்ணினார்.
உரை
   
256. மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,-
ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக்
காணாக் களிக்கும், களி.
உரை
   
257. அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையை
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க!-தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு,
புல்வாய் வழிப்படுவார் இல்.
உரை
   
258. விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார்,
கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி,
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,-
மதிப்புறத்துப் பட்ட மறு.
உரை
   
259. நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண்,
ஓப்பப் படினும், உணங்கலைப் புள் கவரும்;-
போற்றிப் புறந்தந்தக்கண்ணும், பொருளினைக்
காப்பாரின் பார்ப்பார் மிகும்.
உரை
   
260. ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;-
மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு.
உரை