261. மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை
ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து,
நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை,
நாய் காணின் கல் காணாவாறு.
உரை
   
262. கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்
பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே,
தின்பது அழுவதன்கண்.
உரை
   
263. அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி,
இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து,
நினைந்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை,
‘நனைந்து வா’ என்று விடல்.
உரை
   
264. கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
தலைப்பெய்து இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
மலைப் பெயல் காட்டும் துணை.
உரை
   
265. நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி,
வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!-
ஊழ் அம்பு வீழா, நிலத்து.
உரை
   
266. வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்;-
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!-
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு.
உரை
   
267. ‘எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை’ என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க!-எங்கானும்
நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள்.
உரை
   
268. ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல்.
உரை
   
269. அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;-
பொரு படைக் கண்ணாய்!-அதுவால், திரு உடையார்
பண்டம் இருவர் கொளல்.
உரை
   
270. நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே,
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்;-
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!-
கற்பறிவு போகா, கடை.
உரை