271. அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்?-பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின்.
உரை
   
272. எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,
ஒல்லை வெகுளார், ‘உலகு ஆண்டும்!’ என்பவர்;
சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,
கொல்லையில் கூழ்-மரமே போன்று.
உரை
   
273. எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை.
உரை
   
274. செல்வத் துணைமையும், தம் வாழ்நாள் துணைமையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,-
முள்ளித் தேன் உண்ணுமவர்.
உரை
   
275. நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க!-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும்,
ஒன்று இரண்டாம் வாணிகம் இல்.
உரை
   
276. சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல்,-உள் இருந்து,
அச்சாணி தாம் கழிக்குமாறு.
உரை
   
277. புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?-
புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல்.
உரை
   
278. நாடு அறியப்பட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்து
வாடிய காலத்தும், வட்குபவோ?-வாடி,
வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும்,
புலித் தலை நாய் மோத்தல் இல்.
உரை
   
279. விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,
முட்டாது அவரை வியங்கொளவேண்டுமால்;-
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
கொட்டாமல் செல்லாது, உளி.
உரை
   
280. குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினார்;-இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம்.
உரை