281. பொருந்தாதவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,-
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே,
அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு.
உரை
   
282. உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே
உடையானைக் காப்பதூஉம் ஆகும்;-அடையின்,
புதற்குப் புலியும் வலியே; புலிக்குப்
புதலும் வலியாய்விடும்.
உரை
   
283. ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்துவிடல்.
உரை
   
284. காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார்,
பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை-நாவிதன் வாள்
சேப்பிலைக்குக் கூர்த்துவிடல்.
உரை
   
285. காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,
‘மேய்ப்பு ஆட்டது’ என்று உண்ணாள் ஆயினாள்;-தீப் புகைபோல்
மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே,
தம் சாதி மிக்குவிடும்.
உரை
   
286. விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்,
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,-
இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து.
உரை
   
287. ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்;
துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,
எளியாரை எள்ளாதார் இல்.
உரை
   
288. தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நட-அத்தா!-நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல்.
உரை
   
289. மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்;-மெல் இயல்,
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்!-பைங் கரும்பு
மென்றிருந்து, பாகு செயல்.
உரை
   
290. அல்லவை செய்குப, அல்லாப்பின்; அல்லாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைத்து எழுவர்;-
கல்லாக் கயவர் இயற்கை;-நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல்.
உரை